| ADDED : டிச 06, 2025 05:52 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழையால், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 125 ஏரிகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 589 ஏரிகள் என, மொத்தம் 1,117 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில், 2,512 குளங்கள் உள்ளன. மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை மற்றும் 'டிட்வா' புயல் காரணமாக மழை பெய்ததில், நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 125 ஏரிகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஊரக வளர்ச்சித் துறையில், 81 ஏரிகள் மற்றும் 378 குளங்கள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன.