மேலும் செய்திகள்
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
7 minutes ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
7 minutes ago
திருப்போரூர்: கீரப்பாக்கம் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டிருந்த, 14 வீடுகளை, வருவாய்த் துறையினர் நேற்று இடித்து அகற்றினர். வண்டலுார் வட்டம், கீரப்பாக்கம் கிராமத்தில் கல்லாங்குத்து, கொத்துமலை ஆகிய வகைப்பாடு சார்ந்த புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, வருவாய் துறைக்கு கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று, வண்டலுார் தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர், போலீசார் உதவியுடன் மேற்கண்ட பகுதிக்கு வந்தனர். பின், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக அங்கிருந்த குடிசை, தளம் போட்ட 14 வீடுகள், 6 கடைகள், 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி ஆகிய ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது மக்கள் திரண்டு வந்து, வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்தனர். இதனால், கீரப்பாக்கம் கிராமத்தில் சலசலப்பு ஏற்பட்டது.அடுத்தகட்டமாக, ஆக்கிரமிப்பில் உள்ள பல வீடுகளும் அகற்றப்பட உள்ளதாக, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
7 minutes ago
7 minutes ago