உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதியவர் வீட்டில் 22 சவரன் மாயம்

முதியவர் வீட்டில் 22 சவரன் மாயம்

மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச்--1 வள்ளல் அதியமான் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட் ரமணா, 60.குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் வழக்கம் போல துாங்கச் சென்றனர். நேற்று அதிகாலை 3:30 மணியளவில், வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, வெங்கட் ரமணாசென்று பார்த்த போது, வீட்டில் இருந்த மர பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இது குறித்து அவர், மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி