உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து 3 மாடுகள் பலி

மின்சாரம் பாய்ந்து 3 மாடுகள் பலி

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் மூன்று கறவை மாடுகள், நேற்று காலை அப்பகுதி விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்தன.அப்போது, மின்கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து மூன்று மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.தகவல் அறிந்து வந்த மின்வாரியத்தினர், மின் இணைப்பை துண்டித்தனர். பின், திருப்போரூர் கால்நடை மருத்துவர், தண்டலம் வி.ஏ.ஓ., ஊராட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ