மேலும் செய்திகள்
7 கடைகளில் தொடர் திருட்டு
13-Dec-2024
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கொட்டமேடு நான்கு முனை சந்திப்பு அருகே மணிஷ்,34, பன்னீர்செல்வம், 33, ஆகியோர் மொபைல்போன் கடையும், ராமசாமி,65, என்பவர் மளிகை கடையும் நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து, கடையை பூட்டிக் கொண்டு, கடைகளின் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றனர்.நேற்று காலை கடைகளைத் திறக்க வந்தபோது, மூவரது கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.இதில், மணீஷ் கடையில் 10,000 ரூபாய் மதிப்புள்ள, வாடிகையாளர் பழுது பார்க்க கொடுத்த மொபைல்போன்கள் உட்பட 9 மொபைல் போன்கள், பன்னீர்செல்வம் கடையில், 1,000 ரூபாய் மதிப்புள்ள,'ஹெட்செட்' மற்றும் ராமசாமி மளிகை கடையில் 4,000 ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Dec-2024