உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு 30,474 மாணவ, மாணவியர் தயார்

இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு 30,474 மாணவ, மாணவியர் தயார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 30,474 மாணவ- மாணவியர், இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன.மாவட்டத்தில், அரசு பள்ளிகள் 145, அரசு உதவிபெறும் பள்ளிகள் 40, மெட்ரிக் பள்ளிகள் 173 என, மொத்தம் 358 பள்ளிகள் உள்ளன. 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கி, ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு பயிலும் 15 ஆயிரத்து 161 மாணவியர், 15 ஆயிரத்து 313 மாணவர்கள் என, மொத்தம் 30,474 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், 103 தேர்வு மையங்கள், ஒன்பது வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் உள்ள பகுதிகளில், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வினாத்தாள் வாகனம் மூலம் எடுத்துச் செல்லும் போது பரனுார், ஆத்துார் ஆகிய சுங்கச்சாவடிகளில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு எழுத மாணவ, மாணவியர் உரிய நேரத்தில், தேர்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதிகளை, விழுப்புரம் போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக மேலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 21 வழித்தடங்களில், வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன. தேர்வு மையங்களில், அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ