மேலும் செய்திகள்
சலவை தொழிலாளர் 45 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
14-May-2025
செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் நலன் காக்கும் குறைதீர்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், குடிநீர், சாலை வசதி, மகளிர் உரிமைத்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 311 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பின், வண்டலுார் அடுத்த கீரப்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 20 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2.14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'பேட்டரி'யால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், ஊன்றுகோல் ஆகியவை வழங்கப்பட்டன.
14-May-2025