உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வீட்டின் பூட்டை உடைத்து 4.5 சவரன் நகை திருட்டு

 வீட்டின் பூட்டை உடைத்து 4.5 சவரன் நகை திருட்டு

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர், படவட்டம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பாலகணேஷ், 35; தனியார் நிறுவனத்தில் வணிக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக கேரளா சென்றுள்ளார். விழா முடிந்து, நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், பாலகணேஷ் வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 4.5 சவரன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி, சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து அவர், தாம்பரம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்படி, தாழம்பூர் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை