உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேனில் மோதிய சரக்கு வாகனம் மறைமலை நகரில் 5 பேர் காயம்

வேனில் மோதிய சரக்கு வாகனம் மறைமலை நகரில் 5 பேர் காயம்

மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 'ஐ-ப்ரிங்கஸ்' என்ற வாகனங்கள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.நேற்று காலை, செங்கல்பட்டில் இருந்து இந்த தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு,'எய்ச்சர்' வேன், மறைமலை நகர் நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் சென்றது.காரணை புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த முனுசாமி, 44, என்பவர் வேனை ஓட்டினார். மறைமலை நகர் ஜி.எஸ்.டி., சாலையில், 'போர்டு' கார் தொழிற்சாலை சந்திப்பில், வேன் சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த, மற்றொரு 'எய்ச்சர்' சரக்கு வாகனம், இந்த வேனின் மீது மோதியது.இதில், ஊழியர்களை ஏற்றி வந்த வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது. அதில் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர்.அங்கிருந்தோர் அனைவரையும் மீட்டு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், சாலை நடுவே கிடந்த வேனை,'கிரேன்' இயந்திரத்தின் வாயிலாக மீட்டு, போக்குவரத்தை சீரமைத்தனர்.விபத்து குறித்து, பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ