உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு ஓ.எம்.ஆர்., சாலையில், பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது 5 பெண்கள், அங்கு சாலையை கடக்க முயன்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=313qnghs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியது. இதில், லோகாம்பாள் விஜயா, யசோதா, ஆனந்தாயி, கவுரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர்.இதனையடுத்து காரில் வந்த இருவரை மறித்த பொது மக்கள் அவர்கள் மீது சராமரியாக தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரை மீட்டு போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட பொது மக்கள், அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்தவர்கள் அதிவேகத்தில் வந்ததாகவும், இருவர் தப்பிய நிலையில் பிடிபட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இருவர் கைதுஇந்தச் சம்பவம் தொடர்பாக சித்தலபாக்கத்தைச் சேர்ந்த ஜோஸ்வா(19) மற்றும் பெருங்குடியைச் சேர்ந்த தாஹித் அஹமது(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், ஜோஸ்வா காரை ஓட்டி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இரங்கல்

இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்புசாமி
நவ 28, 2024 07:19

தத்திங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி ரோடு போட ஆசை. அங்கே இருக்குற பாதுகாப்பை இங்கே குடுக்க துப்பில்லை. கதி சக்தி ஜிந்தாபாத்.


நிக்கோல்தாம்சன்
நவ 27, 2024 21:25

திரவக மடலில்


Mohanakrishnan
நவ 27, 2024 19:35

காரை ஓட்டி வந்தவர்கள் யார்


என்றும் இந்தியன்
நவ 27, 2024 16:53

5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டு சாலையை கடக்க முயன்றனர்.அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டில் என்ன தான் நடக்குது??? 1 அப்போ மாடுகள் சாகவில்லையா 2 5 பெண்கள் ஒரே நேரத்தில் எப்படி சாக முடியும். இதன் உண்மை நிலவரம் இப்படி இருந்திருக்கும் அதாவது காரணம் - காரணம் பார் காரியம் புரியும் இந்த 5 பெண்களும் மாடுகள் அந்த பக்கம் போன பின் ஒருவர் கையை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டு கார் வருவதை பார்த்து வேகமாக ரோட்டை கடக்க முயற்சித்ததால் இந்த விபரீதம் நடந்திருக்கலாம். டிரைவர் குடித்து விட்டு வண்டியை ஓட்டியிருக்கலாம். ஆகவே இருபக்கத்திலும் தவறு இருந்திருந்தால் தான் இது நடந்திருக்க 100% வாய்ப்புகள்


KRISHNAN R
நவ 27, 2024 16:42

அதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்.. அஜாக்கிரதை அலட்சியம்...மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இருவருமே பொறுப்பு


அப்பாவி
நவ 27, 2024 16:23

காரில் போக முடியாதவங்க வாழ தகுதி இல்லாதவங்கன்னு சிலர் நினைக்கிறாங்க.


ديفيد رافائيل
நவ 27, 2024 16:21

என்ன பண்றது குடும்பத்தில் யாராவது இறந்தால் மட்டுமே ரொம்ப கவனமாக இருக்கின்றனர், அதுவரை கெத்து ன்னு நினைத்து வண்டி ஓட்டுகின்றனர்.


chennai sivakumar
நவ 27, 2024 15:57

நமது மக்கள் சாலை விதிகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவில் உள்ளனர். குறிப்பாக பெங்களூரு ஹைவே வழியாக செல்லும் போதும் இதே நிலைதான்.அனுமதிக்கப்பட்ட வேகத்தில் கார் ஓட்டுவது வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு மட்டுமே. அரசும் என்ன என்னவோ தடுப்பு முறைகளை செய்து வருகிறது. ஆனாலும் நோ use


Palanisamy Sekar
நவ 27, 2024 15:44

சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு சரி, சாலையை கடக்க நினைப்போருக்கு சரி ஒருவருக்கும் சாலைவிதிகளை பற்றி அறவே தெரியாததுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. மக்களிடையே சாலைப்போக்குவரது விதிகள் பற்றிய விழிப்புணர்வை பெரிய அளவில் மக்கள் மத்தியிலே கொண்டு செல்லாமல் போனால் விபத்துகளால் அதிக அளவுக்கு தமிழகத்தில் மரண எண்ணிக்கை கணக்கில் அடங்காத அளவுக்கு போய்விடும். மிக சாதாரணமாக கூட சாலையை கடக்கும் விதிகளை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கும் நிலை பரிதாபகரமானது


Sck
நவ 28, 2024 05:44

இந்த நாட்டில், அதாவது இந்தியா முழுவதும், மக்களிடையே ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது அலட்சிய போக்கு, சுய கட்டுப்பாடின்மை, ஒழுங்கீனம், சமூக அக்கறையின்மை, அடாவடித்தனம், எந்த சட்டத்தையும் மதிக்காத போக்கு போன்று ஒட்டு மொத்தமாக இருக்கிறது நம் ஒவ்வொரிடமும் இருக்கிறது.