உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 545 விநாயகர் சிலை இன்று 4 இடங்களில் கரைப்பு

செங்கையில் 545 விநாயகர் சிலை இன்று 4 இடங்களில் கரைப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று, 545 விநாயகர் சிலைகள், மாமல்லபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் கரைக்கப் படுகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 27ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலக கட்டுப்பாட்டில், 20 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 545 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளை மாமல்லபுரம், கடலுார் குப்பம், தழுதாலிகுப்பம், கடப்பாக்கம் ஆகிய கடற்கரை பகுதிகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 545 விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதையடுத்து, எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சிலைகளை கரைக்க எடுத்துச் செல்லும் வழித்தடங்களில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். பிரச்னைகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தொலைபேசி எண்கள் 72001 02104, 044 - 29540888 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

வழிகள்

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக, மாமல்லபுரம் கடற்கரைக்கு சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். மதுராந்தகத்திலிருந்து முதுகரை சந்திப்பு வழியாக, கடலுார் குப்பத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேல்மருவத்துாரி லிருந்து சித்தாமூர் வழியாக, தழுதாலிகுப்பத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அச்சிறுபாக்கத்திலிருந்து சூணாம்பேடு வழியாக, கடப்பாக்கம் கடற்கரைக்கு கொண்டு செல்ல வேண்டும். தொழுப்பேடிலிருந்து கயப்பாக்கம் வழியாக, கடப்பாக்கம் கடற்கரைக்கு சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். புகார் அளிக்கலாம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விநாயகர் சிலையை கொண்டு செல்லும் போது ஏதேனும் தகவல் தருபவர்களின் விபரம் பாதுகாக்கப்படும். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை