உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.6 கோடியில் திருமண மண்டபம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.6 கோடியில் திருமண மண்டபம்

திருப்போரூர், : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்போது, பக்தர்கள், உறவினர்கள் தங்குவதற்கு போதுமான வசதிகள் இல்லை.பக்தர்கள் தங்குவதற்கும், திருமணம் நடத்துவதற்கும் கோவில் நிர்வாகம் சார்பில், தங்கும் விடுதி, திருமண மண்டபம், ஓய்வு அறை கட்டித்தர வேண்டும் என, பல ஆண்டுகளாக அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து, ஹிந்து அறநிலையத் துறை சார்பில், 2014ல் கோவில் அருகே திருப்போரூர் -- நெம்மேலி சாலையில், தன்னிறைவு திட்டம் மற்றும் கோவில் நிதி 2 கோடி ரூபாயில் திருமண மண்டபம், ஓய்வு விடுதி, ஓய்வுக்கூட வளாகம் ஆகியவை கட்ட திட்டமிட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கின.கடந்த 2016ல், 90 சதவீதம் பணிகள் மட்டும் முடிக்கப்பட்டு, மற்ற பணிகள் முடிக்காமல், 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கோவிலில் ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டனர்.தொடர்ந்து, திருமண மண்டபத்திற்கான புதிய கழிப்பறை கட்டுதல், சமையல் அறை விரிவுபடுத்துதல், பார்க்கிங் தரையை மேம்படுத்துதல் என, அனைத்து பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.முடிவில், 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம்; 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடுதி; 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் என, மொத்தம் 3.36 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, 2022ல் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இந்நிலையில், கோவில் இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கவும், வருமானத்தை அதிகப்படுத்தவும், கூடுதல் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 500 பேர் அமரும் வகையில், புதிதாக மண்டபம் கட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து அரசிடம் பரிந்துரைக்கப்பட்டது.அதன்படி, திருப்போரூர் - -திருக்கழுக்குன்றம் சாலை, தண்டலம் ஊராட்சியில் அடங்கிய எடையான்குப்பம் தனியார் தொழிற்சாலை அருகே, கோவில் இடத்தில் திருமணம் மண்டபம் கட்ட, 6.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருப்போரூரில் கூடுதல் திருமண மண்டபம் கட்ட, அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலான மண்டபம் கட்டுவதால், பொதுமக்களும் பயனடைவர். கோவில் சார்ந்த இடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதால், ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்படும்.- குமரவேல்,கோவில் செயல் அலுவலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி