சிறுங்குன்றம் கடைகளில் 6 கிலோ குட்கா பறிமுதல்
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா விற்கப்படுவதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில், போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதி கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள நாகராஜன், 58, என்பவரின் பெட்டி கடையில் இருந்த 4 கிலோ குட்கா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல், கோமளா, 49, என்பவர் நடத்திய கடையிலும், 2 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருப்பது தெரிந்தது.அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.