மேலும் செய்திகள்
பல்கலை மாணவியை சீண்டிய காவலாளி கைது
28-Jul-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ -- மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவ - மாணவியரை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக, தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்திற்கு, தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில், 60க்கும் மேற்பட்ட போலீசார், 20 குழுக்களாக பிரிந்து, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், பெட்டி கடைகள், டீ கடைகளில் சோதனை நடத்தினர். இதில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த டோடன் பங்கா, 37, பொத்தேரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், 25, மறைமலை நகர் பகுதியை சேர்ந்த முகமது பரீத், 50, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பிரவீன் குமார், 37. தனியார் பல்கலையில் பி.டெக்., படித்து வரும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஈக்னாஸ் சங்கராச்சாரியா, 21, சவுரவ்குமார்,18, உள்ளிட்டோர், போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, இவர்களை கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 5,250 போதை சாக்லேட்கள், 49 கஞ்சா சாக்லேட்கள், கஞ்சா பயன்படுத்தும் கருவிகள், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், 3,500 ரூபாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின், மேற்கண்ட ஆறு பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
28-Jul-2025