மேலும் செய்திகள்
அலமாரியில் வைத்த 6.5 சவரன் நகை மாயம்
01-Nov-2025
சென்னை: சென்னை, சேலையூரை அடுத்த திருவஞ்சேரி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின். அவரது மனைவி லிஷ்சி, 64. இங்கு, கணவன் - மனைவி இருவரும், கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். லிஷ்சி தனது இரு மோதிரங்கள், கம்மல் என, 8 சவரன் நகையை, சிறிய பெட்டியில் வைத்து, அதை படுக்கையறையில் உள்ள மேஜை மீது வைத்திருந்தார். நேற்று முன்தினம் பார்த்தபோது, நகைகள் வைத்திருந்த பெட்டி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீடு முழுதும் தேடியும் கிடைக்காததால், இது குறித்து, சேலையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, இவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Nov-2025