செங்கையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.82 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 2.5 சதவீதம் அதிகரிப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 10 வகுப்பு பொதுத்தேர்வில், 89.82 சதவீதம் மாணவ- - மாணவியர் தேர்ச்சி பெற்று, கடந்த ஆண்டை விட, 2.5 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்று, சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் 35வது இடம் பிடித்துள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. 146 அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், 39 அரசு உதவிபெறும் பள்ளிகள், 178 மெட்ரிகுலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகள் உள்ளன.கடந்தாண்டு, 10ம் வகுப்பு தேர்ச்சி 87.38 சதவீதம் பெற்று, மாநில அளவில் 32வது இடம் பெற்றது.இந்தாண்டு, இப்பள்ளிகளில் இருந்து 30,119 மாணவ - மாணவியர் பொதுத்தேர்வு எழுதினர்.இதில் 27,052 பேர் தேர்ச்சி பெற்று, 89.82 சதவீதம் பெற்றனர். மொத்தம், 79 பள்ளிகள், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.தேர்வு எழுதிய மாணவர்கள் 15,192 பேரில், 13,125 தேர்ச்சி பெற்று, 86.39 சதவீமும், மாணவியர் 14,927 பேரில், 13,972 பேர் தேர்ச்சி பெற்று, 93.30 சதவீதமும் பெற்றனர்.அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைச் சார்ந்த 12,893 மாணவ - மாணவியரில், 10,849 பேர் தேர்ச்சி பெற்று, 84.15 சதவீதம் பெற்றுள்ளனர்.இதில் மாணவர்கள் 6,282 பேரில், 4,967 பேர் தேர்ச்சி பெற்று, 79.07 சதவீதமும், மாணவியர் 6,611 பேரில், 5,882 பேர் தேர்ச்சி பெற்று, 88.97 சதவீதமும் பெற்றுள்ளனர்.* அரசு உதவிபெறும் பள்ளிகள்அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய 4,753 மாணவ - மாணவியரில், 4,147 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.26. இதில், மாணவர்கள் 2,166 பேரில், 1,721 பேர் தேர்ச்சி பெற்று, 79.45 சதவீதமும். மாணவியர் 2,587 பேரில், 2,426 பேர் தேர்ச்சி பெற்று, 93.77 சதவீதம் பெற்றனர்.* மெட்ரிக், சுயநிதி பள்ளிகள்:மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய 12,473 மாணவ - மாணவியரில், 12,056 பேர் தேர்ச்சி பெற்று, 96.66 சதவீதம் பெற்றனர்.தேர்வு எழுதிய 6,744 மாணவர்களில், 6,437 பேர் தேர்ச்சி பெற்று, 95.45 சதவீதம் பெற்றனர். மாணவியர் 5,729 பேரில், 5,619 பேர் தேர்ச்சி பெற்று, 98 சதவீதம் பெற்றுள்ளனர்.* பிளஸ் - 1ல் 89.17 சதவீதம் தேர்ச்சிகடந்த மார்ச்சில் பிளஸ் - 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் 29,621 பேரில், 26,412 பேர் தேர்ச்சி பெற்று, 89.17 சதவீதம் பெற்றுள்ளனர். இதில், 61 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.கடந்தாண்டு, 90.85 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டம் 22வது இடம் பெற்ற நிலையில், இந்தாண்டு, 89.17 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 32வது இடம் பெற்றது.அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைச் சேர்ந்த 12,491 மாணவ - மாணவியரில், 10,008 பேர் தேர்ச்சி பெற்று, 80.12 சதவீதம் பெற்றனர்.அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ- மாணவியர் 4,432 பேரில், 4,013 தேர்ச்சி பெற்று, 89.54 சதவீதம் பெற்றனர்.மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய 12,698 மாணவ- மாணவியரில், 12,391 பேர் தேர்ச்சி பெற்று, 96.75 சதவீதம் பெற்றுள்ளனர்.
* அரசு பள்ளிகள் 100 சதவீதம்
1. குமிழி அரசு உயர் நிலை பள்ளி2. வீராபுரம் அரசு உயர் நிலை பள்ளி3. முதலியார்குப்பம் அரசு உயர்நிலை பள்ளி4. கொடூர் அரசு உயர்நிலை பள்ளி5. இரும்புலி அரசு உயர்நிலை பள்ளி6. பூதுார் அரசு உயர்நிலை பள்ளி7. போந்துார் அரசு உயர்நிலை பள்ளி8. திம்மாபுரம் அரசு உயர்நிலை பள்ளி9. நீலமங்கலம் அரசு உயர்நிலை பள்ளி10. சிதண்டி மண்டபம் அரசு உயர்நிலை பள்ளி11. செங்கல்பட்டு அரசு மாதிரி மேல்நிலை பள்ளி12. கருங்குழி அரசு மேல்நிலை பள்ளி13. புதுப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலை பள்ளி14. பட்டிபுலம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலை பள்ளி
பாடவாரியாக 100 மதிப்பெண்
தமிழ் --- 0ஆங்கிலம் 0சமஸ்கிருதம் 0கணிதம் 1அறிவியல் 12சமூக அறிவியல் 40
தேர்ச்சி சதவீதம்
ஆண்டு தேர்வு எழுதியவர்கள்.. தேர்ச்சி பெற்றோர் சதவீதம்2022 36521 31647 86.652023 37443 33050 88.272024 31916 27889 87.382025 30119 27052 89.82