மின்சார ரயிலில் அடிபட்டு பசு மாடு பலி
மறைமலை நகர்:சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி நேற்று மாலை புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. காட்டாங்கொளத்தூர் -- மறைமலைநகர் ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பசுமாடு ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சிக்கியது.இதன் காரணமாக, ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்திவிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். 15 நிமிடங்கள் ரயில்வே ஊழியர்கள் போராடி தண்டவாளத்தில் சிக்கிய பசு மாட்டின் உடலை மீட்டனர். அதன்பின் ரயில் போக்குவரத்து சீரானது.