உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாய்களை கொல்லும் மர்மநபருக்கு வலை

நாய்களை கொல்லும் மர்மநபருக்கு வலை

திருவள்ளூர், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயா நகர் பகுதியில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. துப்புரவு பணியாளர்கள் இறந்த நாய்களை அகற்றி வந்தனர்.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி'யில் மர்ம நபர் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதும், சிறிது நேரத்தில், அந்த நாய்கள் துடிதுடித்து இறக்கும் காட்சியும் பதிவாயிருந்தது. இதுகுறித்து ஏ.எஸ்.பி., நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், திருவள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை