உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சி, 8வது வார்டு காந்தி நகரில், ௧,௦௦௦த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, நகராட்சி சார்பில், முக்கிய சாலையோரங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியர் மூன்றாவது குறுக்கு தெருவில், மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் கான்கிரீட் தளத்தில், பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக, இரவு நேரத்தில் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள், பள்ளத்தில் சிக்கி விபத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களை கடந்தும், இது வரை சரிசெய்யப்படாமல் உள்ளது. சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர், இந்த பள்ளத்தின் அருகில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டது.எனவே, இந்த பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை