உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நடைபயிற்சிக்கு ஏற்ப குளம்; மாநகராட்சிக்கு வேண்டுகோள்

நடைபயிற்சிக்கு ஏற்ப குளம்; மாநகராட்சிக்கு வேண்டுகோள்

பெருங்களத்துார் : தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், பெருங்களத்துாரில், ஏ.பி.ஜே., அப்துல் கலாம் பூங்கா உள்ளது.சுற்றுச்சுவர், விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பராமரிக்கப்படும் இப்பூங்காவை, தினசரி காலை மற்றும் மாலையில், நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக முதியோர், நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்கா நடுவில், குளம் உள்ளது. முறையாக பராமரிக்காததால், முழுதும் ஆகாய தாமரை வளர்ந்து குளம் இருப்பதே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. மற்றொரு புறம், குளத்தில் உடைந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாமலேயே உள்ளன. அதேபோல், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் துருபிடித்து காணப்படுகின்றன.பூங்கா நடுவில் உள்ள குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றி, சுத்தப்படுத்த வேண்டும். அருகேயுள்ள சிறிய குட்டையையும் சுத்தப்படுத்தி, சுற்றி பொன்மொழிகள் அடங்கிய பலகை வைக்க வேண்டும்.எரியாமல் உள்ள மின் விளக்குகளையும் சரிசெய்ய வேண்டும் என, நடை பயிற்சி செல்லும் மக்கள், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்