உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்தாமூர் அருகே மின்கசிவால் தீக்கிரையான குடிசை வீடு

சித்தாமூர் அருகே மின்கசிவால் தீக்கிரையான குடிசை வீடு

சித்தாமூர், வெள்ளகொண்டகரத்தில், மின்கசிவால் கூரை வீடு தீப்பற்றி எரிந்து நாசமானது.சூணாம்பேடு அடுத்த வெள்ளகொண்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 45; வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி.இவர், கூலி வேலை செய்து கொண்டு, குடிசை வீட்டில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த மின்வடத்தில் மின்கசிவு ஏற்பட்டு, குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.உடனே, குடும்பத்தினர் வெளியேறி, தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், குடிசை வீடு முழுதும் எரிந்து, வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகின.இந்த தீ விபத்து குறித்து, சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை