விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
மாமல்லபுரம்மாமல்லபுரம் அடுத்த ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் காளி, 44; கார் ஓட்டுநர். கடந்த 3ம் தேதி இரவு 8:30 மணிக்கு, மாமல்லபுரத்திலிருந்து காரணை நோக்கி, 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில் சென்றார். சாலை விரிவாக்கப் பணிக்காக குவித்திருந்த மண் குவியலில் சிக்கி, சறுக்கி விழுந்து காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று காலை, 10:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.