உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  போலீசுக்கு தண்ணி காட்டிய பலே வாலிபர் பிடிபட்டார்

 போலீசுக்கு தண்ணி காட்டிய பலே வாலிபர் பிடிபட்டார்

செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார், கிராம நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் சந்தனமாரி, 37. கடந்த 20ம் தேதி, இவரது இருசக்கர வாகனம் திருடு போனது. செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அப்போது, கண்ணகி நகர், நீலாங்கரை, கானத்துார், பள்ளிக்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காவல் நிலைய எல்லைகளில் நடந்த திருட்டு சம்பவங்களில், கேமரா பதிவுகளில் உள்ள நபரும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரும் ஒரே நபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, செம்மஞ்சேரி காவல் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிரமாக தேடி வந்தனர். இதில், இ.சி.ஆரில் வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த அஜித்குமார், 20, என தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்து விசாரித்ததில், சிறு வயது முதல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. பல்வேறு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து, மூன்று மாதமாக தேடி வந்த நிலையில், செம்மஞ்சேரி போலீசாரிடம் சிக்கினார். அவரை நேற்று கைது செய்த போலீசார், மூன்று இருசக்கர வாகனங்கள், உண்டியல் பணம், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ