மேலும் செய்திகள்
மறைமலைநகரில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்
07-Oct-2024
மறைமலை நகர்:தாம்பரம் சானடோரியம் பகுதியை சேர்ந்தவர் சபரி என்ற சபரிநாதன், 22. இவர் மீது, மறைமலை நகர் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சபரி, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.இது தொடர்பாக, மறைமலை நகர் போலீசார் சபரியை தேடி வந்த நிலையில், நேற்று மறைமலை நகர் பகுதியில் சுற்றித்திரிந்த சபரியை, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.விசாரணைக்கு பின், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சபரியை ஆஜர்படுத்தினர்.
07-Oct-2024