உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் கம்பி அறுந்து விபத்து

மின் கம்பி அறுந்து விபத்து

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருள் நகர், திருஞானசம்பந்தர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நேற்று பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக, அப்பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதனால், அப்பகுதி முழுதும் மின்தடை ஏற்பட்டது.இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள் ஊரப்பாக்கம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, மின் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து, அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.பின், அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைத்து, உடனடியாக அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி