விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
திருக்கழுக்குன்றம்: அக். 30-: வழுவதுாரில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார். திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதுாரைச் சேர்ந்தவர் ஆனந்த், 36; கூலித்தொழிலாளி. நேற்று காலை 7:30 மணியளவில், வீட்டின் அருகே திருக்கழுக்குன்றம் சாலையில், பல் துலக்கியபடி நடந்து சென்றார். அப்போது, மதுராந்தகத்திலிருந்து திருக்கழுக்குன்றம் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, அவர் மீது மோதியது. இதில் அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்சில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி, 9:00 மணியளவில் உயிரிழந்தார். இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.