உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநகர பேருந்துகளால் அதிகரிக்கும் விபத்துகள் தனிப்பாதை உருவாக்கி இயக்க சென்னை ஐ.ஐ.டி., ஆய்வில் பரிந்துரை

மாநகர பேருந்துகளால் அதிகரிக்கும் விபத்துகள் தனிப்பாதை உருவாக்கி இயக்க சென்னை ஐ.ஐ.டி., ஆய்வில் பரிந்துரை

சென்னை:மாநகர போக்குவரத்து கழகத்தில் நடக்கும் விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், அதற்கான தீர்வு குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் கீதகிருஷ்ணன் தலைமையிலான ஆறு பேர் குழுவினர், ஆறு மாதங்களாக பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.மொத்தம் 100 பக்கங்கள் உடைய ஆய்வு அறிக்கை, சென்னை ஐ.ஐ.டி.,யில் வெளியிடப்பட்டது.மாநகர பேருந்துகள் விபத்துகளில் சிக்குவதற்கான காரணங்கள், அதிக விபத்து நடக்கும் வழித்தடங்கள், விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல விபரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் கீதகிருஷ்ணன் கூறியதாவது:மாநகர பேருந்து விபத்துகளுக்கு மோசமான சாலை, தொழில்நுட்ப கோளாறு, ஓட்டுனர்களின் கவனக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது தொடர்பான ஆய்வுக்கு, 'ரெனால்ட் நிசான் டெக்னாலஜி' நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி உதவியாக இருந்தது.மொத்தம் 500 மாநகர பேருந்து ஓட்டுனர்களிடம் ஆய்வு நடத்தினோம். தவிர, 200 மாநகர பேருந்துகளில் பிரத்யேக 'சிப்' பொருத்தியும், 'சிமுலேட்டர்' எனும் 'மாதிரி ஓட்டுனர் கூடத்தில்' 200 ஓட்டுனர்களை இயக்க வைத்தும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பேருந்து ஓட்டுனர்கள், இரவு ஷிப்டுகளில் கூடுதலாக பணியாற்றுவது, இரண்டு ஷிப்டுகளை தொடர்ச்சியாக பார்ப்பது ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகளவில் நடந்துள்ளது. அதேபோல் கோபம், பதற்றமாக இருக்கும் ஓட்டுனர்கள், பேருந்துகளை வேகமாக செலுத்துவது, திடீரென பிரேக் போட்டு ஓட்டுவது போன்ற அதிக அதிர்வுகளோடு செலுத்துவதாலும் விபத்துகள் நடந்துள்ளன.முக்கியமாக, மாநகர பேருந்து இயக்க நேர அட்டவணை, பல ஆண்டுகள் பழமையானது. இந்த கால அட்டணை, சென்னையில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு சரியாக இல்லை.ஓட்டுனர்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். பல மடங்கு வாகன பெருக்கம், மெட்ரோ உள்ளிட்ட திட்டப்பணிகளாலும் நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றார்போல், பேருந்து இயக்க கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்.அதேபோல், பேருந்துகளுக்கென என தனிப்பாதை உருவாக்கி, அதில் பேருந்துகளின் சேவையை அதிகரிக்க வேண்டும்.இந்த அறிக்கையை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்துள்ளோம். இந்த அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்படும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநகர பேருந்துகள் அதிகமாக விபத்துகளில் சிக்கும் சாலைகள்

தாம்பரம் - குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் சாலைகள் கோயம்பேடு மேம்பாலம் - ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை, வடபழனி சிக்னல், ஆற்காடு சாலை அண்ணா சாலை - ஈக்காட்டுத்தாங்கல் - கத்திப்பாரா சந்திப்பு, கிண்டி - சின்னமலை சாலை, தி.நகர் பேருந்து நிலையம் - கோடம்பாக்கம் மேம்பாலம் ராஜிவ்காந்தி சாலை - ராஜிவ்காந்தி ஐ.டி., எக்ஸ்பிரஸ்வே, கண்ணகி நகர் பேருந்து நிலையம் - திருவான்மியூர் பேருந்து நிலையம், டாக்டர் முத்துலட்சுமி சாலை - அடையாறு மேம்பாலம் - பெசன்ட் நகர் காமராஜர் சாலை - சேப்பாக்கம் - நேப்பியர் பாலம். ராஜாஜி சாலை மேற்கண்ட சாலை வழியாக மாநகர பேருந்துகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி உள்ளன. இந்த சாலைகளில் செல்லும் மாநகர பேருந்துகளை இயக்குவோர், நல்ல பயிற்சி பெற்ற ஓட்டுனர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017 - 2021ம் ஆண்டு வரை

விபத்தில் அதிகமாக சிக்கிய பேருந்துகள்வழித்தடம் மாநகர பஸ் எண் விபத்துகளின் எண்ணிக்கைபூந்தமல்லி - திருவொற்றியூர் 101 128தாம்பரம் - பிராட்வே 21ஜி 121கேளம்பாக்கம் - சி.எம்.பி.டி., 570 111செங்குன்றம் - பூந்தமல்லி 62 103* இதேபோல், அண்ணா நகர், தாம்பரம், பல்லவன் இல்லம், கே.கே.நகர் பணிமனைகள் கீழ் இயக்கப்படும் பேருந்துகளும், அதிகளவில் விபத்துக்களில் சிக்கியுள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

பேருந்துகள் செல்லும் வழித்தடம் - 700 தினம் இயக்கப்படும் பேருந்துகள் - 3,454தினம் பயணிப்போர் - 30.70 லட்சம் பேர்

காரணங்கள்

ஓட்டுனர்கள் இரவு ஷிப்டுகளில் கூடுதலாக பணியாற்றுவது, இரண்டு ஷிப்டுகளை தொடர்ச்சி யாக பார்ப்பது குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்து குறிப்பிட்ட டிரிப்களை இயக்குவதற்கு அறிவுறுத்துவது பதற்றம் மற்றும் கோபத்தில் பேருந்துகளை வேகமாக செலுத்துவது, திடீரென பிரேக் போட்டு ஓட்டுவது பல மடங்கு வாகன பெருக்கம், மெட்ரோ உள்ளிட்ட திட்டப்பணிகளால் அதிகரித்துள்ள நெரிசல் தற்போதைய நடைமுறைக்கு ஒத்துவராத பழைய அட்டவணையை பின்பற்றுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி