உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உணவு கழிவுகளை தேடி வரும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு

உணவு கழிவுகளை தேடி வரும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு

ஊரப்பாக்கம்,:ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து காரணை புதுச்சேரி ஊராட்சி செல்லும் சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.இந்த சாலையின் துவக்கத்தில், முதல் 100 மீ., துாரத்திற்குள், 20க்கும் மேற்பட்ட உணவகங்கள், டாஸ்மாக் மதுக்கூடம் மற்றும் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு சேகரமாகும் உணவுக் கழிவுகள், அருகே உள்ள சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன.சுற்றுப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாடுகள், இந்த உணவுக் கழிவுகளை உண்ண வருகின்றன. அப்போது, ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு முட்டி, சாலையின் நடுவே திடீரென ஓடுகின்றன. இதனால், இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இந்த சம்பவம் தினமும் நடப்பதால், காரணை புதுச்சேரி சாலையில் வரும் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ