உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குற்ற ஆவண டி.எஸ்.பி.,க்கு மாமல்லை கூடுதல் பொறுப்பு

குற்ற ஆவண டி.எஸ்.பி.,க்கு மாமல்லை கூடுதல் பொறுப்பு

மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் டி.எஸ்.பி., அனுமந்தன், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.மாமல்லபுரம் போலீஸ் துணை கோட்டத்தில் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கூவத்துார், திருப்போரூர், காயார் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன.இப்பகுதி டி.எஸ்.பி.,யாக, ரவி அபிராம் பணியாற்றினார்.தற்போது தாம்பரம் போலீஸ் ஆணையரகத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் டி.எஸ்.பி., அனுமந்தன், கூடுதல் பொறுப்பில் மாமல்லபுரம் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி