உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கல் குவாரிக்காக மரங்களை அகற்றி சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு

 கல் குவாரிக்காக மரங்களை அகற்றி சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு

செய்யூர் அருகே சின்னவெண்மணியில் அடாவடிசெய்யூர்: சின்னவெண்மணி கிராமத்தில், கல்குவாரிக்குச் செல்வதற்கு வசதியாக, காட்டுப்பகுதியில் உள்ள மரங்களை அகற்றி சாலை அமைக்கும் பணிகள் நடப்பதாக, கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செய்யூர் அடுத்த சின்னவெண்மணி கிராமத்தில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட சமூக காடு உள்ளது. இதில், பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. சின்னவெண்மணி கிராமத்திற்கு அருகே உள்ள பெரியவெண்மணி கிராமத்தில், கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகள் மற்றும் கிரஷர்களுக்கு லாரிகள் சென்று வர வசதியாக, சின்னவெண்மணியில் உள்ள சமூக காட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் 'பொக்லைன்' இயந்திரங்கள் மூலமாக காட்டுப் பகுதியில் உள்ள மரங்களை அகற்றி, கிராவல் மண் கொட்டி, 40 அடி அகலத்தில் இந்த சாலை அமைக்கப்பட்டு வருவதாக, கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, காட்டுப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கல்குவாரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ