உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பால் ஷீலிங் விழுந்ததால் அம்மா உணவகம் மூடல்

பால் ஷீலிங் விழுந்ததால் அம்மா உணவகம் மூடல்

பம்மல்:தாம்பரம் மாநகராட்சியில், ஏழு 'அம்மா' உணவகங்கள் செயல்படுகின்றன. இதில், 1வது மண்டலம், பம்மல், அண்ணா சாலையில் 'அம்மா' உணவகம் உள்ளது.நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், இங்கு உணவு அருந்துகின்றனர்.இந்த உணவகத்தின் கூரை, சிமென்ட் அட்டையால் போட்டப்பட்டது. வெயில் காலத்தில் வாடிக்கையாளர்கள் சிரமப்படாமல் இருக்க, 'பால் ஷீலிங்' அமைக்கப்பட்டிருந்தது. இதன் பூச்சு அவ்வப்போது விழுந்து வந்தது.இந்த நிலையில், பால் ஷீலிங்கின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், அங்கு புணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பால் ஷீலிங் முழுதாக அகற்றப்பட்டது. பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பம்மல் அம்மா உணவகம் நேற்று மூடப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பால் ஷீலிங் உடைந்து விழவில்லை. பலவீனமடைந்து விழும் நிலையில் இருந்ததால், அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெண் ஊழியர் மீது விழுந்துவிட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை