உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்கூட்டரில் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

ஸ்கூட்டரில் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே, ஸ்கூட்டரில் கார் மோதிய விபத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார். செங்கல்பட்டு அடுத்த மனாலிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 19. இவரது நண்பர், வடகடும்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுனில்,18. இருவரும், மகேந்திரா சிட்டி பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 19ம் தேதி அதிகாலை,'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் செங்கல்பட்டு நோக்கி, ஜி.எஸ்.டி., சாலையில் வந்தனர். ஸ்கூட்டரை சுனில் ஓட்டி வந்தார். செங்கல்பட்டு அடுத்த பச்சையம்மன் கோவில் அருகிலுள்ள கடையில் டீ குடித்துவிட்டு, மீண்டும் ஜி.எஸ்.டி., சாலையை ஸ்கூட்டரில் கடக்க முயன்றனர். அப்போது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற, 'மாருதி ஸ்விப்ட்' கார் மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சுனில் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று காலை, சதீஷ்குமாரும் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை