உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் இடத்தில் எச்சரிக்கை பதாகை சமூக விரோதிகள் தொடர்ந்து அகற்றம்

கோவில் இடத்தில் எச்சரிக்கை பதாகை சமூக விரோதிகள் தொடர்ந்து அகற்றம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம், தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த கோவில் நிலத்தை மீட்டு அமைக்கப்பட்ட அறிவிப்பு பதாகையை, சமூக விரோத கும்பல் தொடர்ந்து அகற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு சொந்தமாக, பல அறக்கட்டளை, மடங்கள் ஆகியவற்றின் நிலம் உள்ளது.இங்குள்ள சன்னிதி தெருவில், அரசு மருத்துவமனை அருகில், ராஜகோபால் செட்டியார் என்பவர், சித்திரை பெருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, அறக்கட்டளை ஏற்படுத்தினார். இங்கு, பழங்கால சத்திரத்துடன், 1.07 ஏக்கர் இடம் உள்ளது. அதன் இன்றைய மதிப்பு 10 கோடி ரூபாய்.இவ்விடம், வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலையில், தனியார் விற்க முயன்றதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, கோவில் நிர்வாகம், கடந்த 2023 மார்ச்சில், அந்நிலத்தை கைப்பற்றி, அறநிலையத்துறைக்கு சொந்தமானமானதாக அறிவித்து, ஆக்கிரமிக்க முயன்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து, எச்சரிக்கை பலகை அமைத்தது.இந்நிலையில், சமூக விரோத கும்பல், கோவில் இடத்தை அபகரிக்க கருதி, எச்சரிக்கை பலகையில் ஒட்டப்பட்டுள்ள பதாகையை, தொடர்ந்து அகற்றி வருகிறது.கோவில் நிர்வாகம் சார்பில் மீண்டும் அறிவிப்பு பதாகை அமைக்கப்பட்டாலும், இக்கும்பல் அதை அகற்றி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவில் நிர்வாகம் சார்பில், அந்த மர்ம கும்பல் மீது போலீசில் புகார் அளித்தும், அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல், போலீசார் அலட்சியப்படுத்துவதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ