மேலும் செய்திகள்
அரசு பெண்கள் பள்ளிக்கு மின் மோட்டார் வழங்கல்
28-Jun-2025
மேல்மருவத்துார்:ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரியில், அறம் 25 பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி. எம்.எஸ்., படித்த மாணவர்களுக்கு, அறம் 25 பட்டமளிப்பு விழா, பங்காரு அடிகளார் திருமண மண்டபத்தில், ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், நேற்று நடந்தது. ஆதிபராசக்தி கல்வி மருத்துவ பண்பாடு அறநிலைய துணைத் தலைவரும், மருத்துவக் கல்லுாரி தாளாளருமான அன்பழகன் முன்னிலை வகித்தார்.முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று, 2019-20ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்த மாணவ - மாணவியர் 148 மற்றும் 2021ம் ஆண்டு முதுகலை எம்.டி.எம்.எஸ்., பிரிவில், 34 மாணவர்கள் என மொத்தம், 182 மாணவர்களுக்கு பட்டங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.இதில், ஆதிபராசக்தி அறநிலைய துணைத்தலைவர் செந்தில்குமார், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குநர் ரமேஷ், ஆதிபராசக்தி பாரா மெடிக்கல் கல்லுாரிகளின் தாளாளர் ஸ்ரீலேகா செல்தில்குமார், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி செயலர் மதுமலர் பிரசன்னா வெங்கடேஷ்.ஆதிபராசக்தி அறநிலைய முதன்மை செயல் அலுவலரும், மேல்மருவத்துார் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான அகத்தியன் மற்றும் கல்லுாரி முதல்வர் கண்ணன், கண்காணிப்பாளர் சவுந்தராஜன், தலைமை நிர்வாக அதிகாரி லிங்கநாதன் உள்ளிட்ட அனைத்து துறையின் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ - மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.
28-Jun-2025