உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் சுருட்டியவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் சுருட்டியவர் கைது

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜே.சி.கே., நகரை சேர்ந்தவர் ஹேமாவதி, 43. இவரது குடும்ப நண்பரான புதுக்கோட்டை மாவட்டம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் லயோலா ரொசாரியே சர்ச்சில், 28. என்பர், கடந்த 2020ம் ஆண்டு, ஹேமாவதியிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, முதற்கட்டமாக 2 லட்ச ரூபாயும், சிறுகச்சிறுக, 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை வரை பெற்றுள்ளார்.மேலும், ஹேமாவதியின் உறவினர்கள் சிலரிடமும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 41 லட்சத்து 92,000 ரூபாய் வரை பெற்று திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இது குறித்து, ஹேமாவதி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்படி, லயோலா ரொசாரியே சர்ச்சிலை, நேற்று கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை