உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓவியம், சிற்ப கண்காட்சிக்கு கலை படைப்புகள் வரவேற்பு

ஓவியம், சிற்ப கண்காட்சிக்கு கலை படைப்புகள் வரவேற்பு

மாமல்லபுரம்:தமிழக கலை, பண்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் மண்டல ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சிக்கு, கலைஞர்களிடமிருந்து கலை படைப்புகளை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கலை பண்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் மண்டல பகுதியில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் உள்ளன.இப்பகுதியைச் சேர்ந்த ஓவியம், சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி சிறப்பிக்க, அத்துறை சார்பில், மண்டல ஓவியம், சிற்பக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி, தற்போது நடத்தப்பட உள்ளது.இதையடுத்து, மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களிடம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட படைப்புகளை வரவேற்பதாக, அத்துறை அறிவித்துள்ளது.ஓவியம் அல்லது சிற்பத்தின், 12 - 8 அல்லது 10 - 12 அளவு புகைப்படத்தை, அதிகபட்சம் ஐந்து படைப்புகள் வரை அனுப்பலாம். தேர்வு செய்யப்படும் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெறும்.மேலும், முதல் பரிசாக, ஏழு பேருக்கு தலா 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, ஏழு பேருக்கு தலா 3,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, ஏழு பேருக்கு, தலா 2,000 ரூபாய் அளிக்கப்படும். விண்ணப்பிக்க இறுதிநாள்: டிச., 10.விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள், மண்டல கலை, பண்பாட்டு மையம், சதாவரம், கோட்டைக்காவல், ஓரிக்கை, காஞ்சிபுரம் - 631502 என்ற மண்டல முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை