உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மனைவியிடம் பேசிய பெண்ணை தாக்கிய அரும்பாக்கம் ரவுடி கைது

மனைவியிடம் பேசிய பெண்ணை தாக்கிய அரும்பாக்கம் ரவுடி கைது

அரும்பாக்கம், அரும்பாக்கம், திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வி, 30. இவர், அதே பகுதியில் இயங்கும், 'இ- சேவை' மையத்தில், மனு எழுதும் வேலை செய்கிறார்.இவர், இரு தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சோபியா என்பவருடன், திருவீதியம்மன் கோவில் தெருவில், பேசிக் கொண்டு நடந்து சென்றார்.அப்போது, சோபியாவின் கணவரான, பழைய குற்றவாளியான ஜெகன், 32, என்பவர், 'மனைவியை எங்கு அழைத்து செல்கிறாய்' எனக் கேட்டு, செல்வியை கன்னத்தில் அறைந்துள்ளார்.பின், அன்றைய இரவு, மொபைல் போனில் செல்வியை அழைத்து, இதுகுறித்து போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என, ஜெகன் மிரட்டியுள்ளார்.புகாரின்படி, அரும்பாக்கம் போலீசார் விசாரித்து, திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகன், 32, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ