மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுனர் கை எலும்பை முறித்தவர் கைது
13-Nov-2024
திருப்போரூர், செங்கல்பட்டு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கேளம்பாக்கம் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் தினமும் காலை, மாலையில் ஒரே ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.நேற்று முன்தினம், வழக்கமாக ஆட்டோ ஓட்டும் ஓட்டுனர் வரவில்லை. அவருக்கு பதிலாக திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சாகுல் அமீது, 32, என்பவர், சிறுமியை பள்ளியிலிருந்து அழைத்து வந்துள்ளார்.ஆட்டோவில் உடன் வந்த மற்ற சிறுமியர் அவரவர் பகுதியில் இறங்கிய நிலையில், 13 வயது சிறுமி மட்டும் ஆட்டோவில் தனியாக வந்துள்ளார்.அப்போது, ஆட்டோ ஓட்டுனர் சாகுல் அமீது, சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் திருப்போரூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த போலீசார், ஆட்டோ ஓட்டுனர் சாகுல் அமீது மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
13-Nov-2024