உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பாரம்பரிய வீரக்கலைகள் மாமல்லையில் விழிப்புணர்வு

 பாரம்பரிய வீரக்கலைகள் மாமல்லையில் விழிப்புணர்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பாரம்பரிய வீரக்கலைகள் நிகழ்த்தி சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொல்லியல் துறை சார்பில், உலக பாரம்பரிய வாரம் கடந்த 19ம் தேதி துவங்கியது. நாளை மறுநாள் வரை கடைபிடிக்கப்படுகிறது. இங்குள்ள கடற்கரை கோவில் வளாகத்தில், அபிராமி யோகாலய குழு மாணவ - மாணவியர், சிலம்பம், வேல்கம்பு உள்ளிட்ட பாரம்பரிய வீரக்கலைகள், வேலு நாச்சியார் மற்றும் குழலி கத்தி சண்டை ஆகியவை நிகழ்த்தினர். வந்தே மாதரம் பாடலின் 150ம் ஆண்டை முன்னிட்டு, தேசியக்கொடியுடன் உலா சென்றனர். வெளிநாட்டவர் உள்ளிட்ட பயணியர் வியந்து பாராட்டினர். தொல்லியல் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர், அபிராமி யோகாலய நிறுவனர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ