உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டில் உள்ள லிட்டில் ஜாக்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்,'புகை நமக்கு பகை' என்ற தலைப்பில், புகையிலை பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடத்தினர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இப்பேரணியை, செங்கல்பட்டு நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லஷ்மிபதி, பள்ளி தலைவர் ஜோஸ்வா சாம்டேனி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி வரை சென்று பேரணியை முடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி