உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உண்டியல் உடைத்து திருட்டு

உண்டியல் உடைத்து திருட்டு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சி, குன்றுக்காடு பகுதியில் வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் கோவிலுக்கு வழிபட சென்றனர். அப்போது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. அங்கிருந்த வெள்ளிமாலை உள்ளிட்ட பூஜை பொருட்களும் திருட்டு போயின. இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை