உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் பூங்காவில் புதிய கழிப்பறை கட்ட பூமி பூஜை

வண்டலுார் பூங்காவில் புதிய கழிப்பறை கட்ட பூமி பூஜை

தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து, தனியார் நிதி மூலம், பார்வையாளர்களின் வசதியை மேம்படுத்த புதிதாக ஆறு கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை மற்றும் தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் அமையவுள்ளன. இரண்டு பழைய கழிப்பறைகள் புதுபிக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்கான பூமி பூஜை, நடந்தது. இதில், பூங்கா இயக்குனர் ஆசிஷ்குமார் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை