மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை
25-Nov-2025
சென்னை: சென்னை விமான நிலையத்தின் வெளியே ரேபிடோ உள்ளிட்ட 'பைக் டாக்ஸி' ஓட்டுவோரிடம், ஆட்டோ ஓட்டுநர்கள் அடாவடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. சென்னை விமான நிலையத்திற்குள் கார்களில் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர், 'மல்டி லெவல் பார்க்கிங்' பகுதியில் நிறுத்த வேண்டும். பொதுவாக பயணியர் கார், ஆட்டோ அல்லது பைக் டாக்ஸிகளில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக விமான நிலைய மெட்ரோவுக்குள் நுழைந்து, முனையங்களுக்கு செல்வர். 'ரேபிடோ, உபர், ஓலா' ஆகிய செயலிகளில், பைக் டாக்ஸியிலும் பலர் இங்கு வந்து செல்கின்றனர். இப்படி வருவோரை, விமான நிலைய மெட்ரோவுக்கு, வெளியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தகாத வார்த்தைகளில் திட்டுவது, பைக்கில் இருந்து சாவியை பிடுங்குவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக, பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு, சென்னை விமான நிலைய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர்கூறியதாவது: தாம்பரத்தில் இருந்து பயணி ஒருவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு, விமான நிலைய மெட்ரோ நுழைவு வாயிலில் இறக்கிவிட்டேன். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர், 'எங்கிருந்து சவாரி பிடித்து வருகிறாய்' என கேட்டு, 'இங்கு வரக்கூடாது. இத்துடன் கிளம்பிவிடு' என ஒருமையில் பேசினார். என் பைக்கின் சாவியையும் பிடிங்கி ரகளை செய்தார். மற்ற சில ஆட்டோ ஓட்டுநர்களும் சூழ்ந்து தகாத வார்த்தைகளில் திட்டினர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பயணியர், தங்கள் வசதிக்கேற்ப பைக் டாக்ஸியில் பயணம் செய்கின்றனர். ஆனால், விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், அவ்வாறு செல்லக்கூடாது எனக்கூறி, தகராறில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது விமான நிலைய மற்றும்மீனம்பாக்கம் போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கூறினார்.
25-Nov-2025