உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக்கில் சென்றவர் சாலை விபத்தில் பலி

பைக்கில் சென்றவர் சாலை விபத்தில் பலி

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, பைக்கில் சென்றவர், மின்கம்பத்தில் மோதியதில், சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.மதுராந்தகம் அடுத்த, அண்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத், 31; கருங்குழி அருகே உள்ள தனியார் காஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, வேலை முடிந்து, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதினார்.இதில், நிலைதடுமாறி, சாலையோரம் தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில், பைக்குடன் விழுந்துள்ளார்.நேற்று காலை 6:00 மணியளவில், அப்பகுதி வழியாகச் சென்ற மக்கள், இருசக்கர வாகனத்துடன், இளைஞர் ஒருவர் சாலையோர பள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.மதுராந்தகம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி