உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜெர்மனி விமானத்திற்கு குண்டு மிரட்டல்

ஜெர்மனி விமானத்திற்கு குண்டு மிரட்டல்

சென்னை ஜெர்மனி நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து, 'லுப்தான்சா ஏர்லைன்ஸ்' விமானம், 274 பேருடன் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இரவு 7:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் லுாதியனாவில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, மர்ம முகவரியில் இருந்து இ- - மெயில் ஒன்று வந்தது.அதில், ஜெர்மனி நாட்டிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும், 'லுப்தான்சா' விமானத்தில், மனித வெடிகுண்டு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.இந்த நிலையில், விமானம் நள்ளிரவு 12:20 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. பாதுகாப்புஙக அதிகாரிகள், உடனடியாக சோதனையை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதையடுத்து, பயணியர் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை