மேலும் செய்திகள்
குறைதீர்வு கூட்டத்தில் 417 மனு ஏற்பு
22-Jan-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தக திருவிழா இன்று துவங்கி, 28ம் தேதிவரை நடக்கிறது.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஆறாவது ஆண்டு புத்தகத்திருவிழா நடத்துகிறது. செங்கல்பட்டு சி.எஸ்.ஐ.. அலிசன்காசி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், இன்று 20ம் தேதி துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, புத்தக திருவிழாவை துவக்கி வைக்கிறார். கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட வருவாய் சேக் முகையதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
22-Jan-2025