உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு கடித்த சிறுவன் உயிரிழப்பு

பாம்பு கடித்த சிறுவன் உயிரிழப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே உள்ள தண்டரை புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரதீப், 9. இவர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 4-ம் வகுப்பு படித்து வந்தார்.இரண்டு தினங்களுக்கு முன், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரதீப்பை விஷப்பாம்பு தீண்டி உள்ளது.பெற்றோர், சிறுவனை உடனடியாக மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வு முடிந்து, சிறுவன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.பின், மதுராந்தகம் போலீசார், சிறுவன் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி