உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் பூட்டை உடைத்து திருட்டு

கோவில் பூட்டை உடைத்து திருட்டு

மறைமலை நகர்,:செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளி கிராமத்தில் ஜி.எஸ்.டி., சாலையில் பழையான அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.நேற்று அதிகாலை கோவிலை திறக்க வந்த கோவில் பூசாரி ராதாகிருஷ்ணன், 58, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை