உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு பூட்டை உடைத்து நகை, பணம் ஆட்டை

வீடு பூட்டை உடைத்து நகை, பணம் ஆட்டை

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த தாதங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 38. இவரது தந்தை டில்லிராஜா உடல்நலக்குறைவால் உள்நோயாளியாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.இதற்காக, கடந்த டிச., 6ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னை சென்றார்.தந்தைக்கு சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய், 10 கிராம் தங்க நகை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்து, அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ