உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ் சக்கரத்தில் புகுந்த நாய்க்குட்டி காப்பாற்றிய நடத்துநருக்கு பாராட்டு

பஸ் சக்கரத்தில் புகுந்த நாய்க்குட்டி காப்பாற்றிய நடத்துநருக்கு பாராட்டு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், கொளத்துார் -- தி.நகர், தடம் எண் 'எம்51வி' என்ற பேருந்து, மாம்பாக்கம் வழியாக சென்றது. அப்பேருந்து நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, மாம்பாக்கம் சிவன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நின்று, மீண்டும் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, பேருந்து சக்கரத்தின் அடியில், நாய்க்குட்டி ஒன்று திடீரென வந்தது. ஓட்டுநர் பேருந்தை இயக்க முயற்சித்த நேரத்தில், நாய்க்குட்டி சக்கரத்தில் சிக்கியதை அறிந்த நடத்துநர் பாபு, 50, என்பவர், உடனே பேருந்து நிறுத்தும்படி ஓட்டுநரிடம் கூறி, கீழே இறங்கினார். பின், சக்கரம் அடியில் இருந்த நாய்க்குட்டியை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விட்டார். நாய்க்குட்டியின் உயிரை காப்பாற்றிய நடத்துநரை, பயணியர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை